பக்கவாட்டுச் சிந்தனைகள் மூலம் முக்கிய சிக்கல்களை தீர்ப்பது (Using Lateral Thinking to Solve Important Problems) | ஈழத்திலிருந்து சிலிக்கன் வலி வரை | ரூபன் கணபதிபிள்ளை
Description
என்பதாக அர்த்தப்படாது. அது அறிவியல் பாதி, செய்கலை பாதி கலந்து செய்த நுட்பத்தினூடாகவே புதிய சிந்தனைகளும், அதன் வழியே புதிய தொழில்களும் பிறப்பெடுக்கின்றன. அப்படியான புதுமைகளுக்கு அடிநாதமாக இருப்பதுதான் பக்கவாட்டுச் சிந்தனை(Lateral Thinking).
இந்தப் பக்கவாட்டுச் சிந்தனையால் வென்றவர்கள் வரிசையில் வாழும் உதாரணமாக இருப்பவர், உலகின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரான அமேசான் (Amazon.com) நிறுவனத்தின் நிறுவுநர் ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos) தான். அவர் தன் தொழில் முயற்சியை வித்தியாசமாகவும், தனித்துவமாகவும், பட்டறிவையும் கற்பனையையும் கலந்து யோசித்ததால் தான் இன்றைக்கு இந்தளவுக்கு அவரால் உயரமுடிந்தது. இப்படி ஜெஃப் பெசோஸின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் பக்கவாட்டுச் சிந்தனையை அவருக்கு அறிமுகப்படுத்தியது ஒரு இலங்கையர் என்பது பலருக்கும் தெரியாத இரு விடயம்.
ஜெஃப் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் (Princeton University) பயின்றபோது, அவரது அறைத்தோழனாக இருந்தவர் ஒரு இலங்கையர். அவர்தான் மிகச் சிக்கலான கணிதப் புதிர்களுக்கெல்லாம், மாற்றுவழிகளில் தனக்கேயுரித்தான புதுமையான பாணியில் விடைகளை விரைவாகவும் சரியாகவும் கண்டுபிடித்துக் காட்டினார். அதைப் பார்த்த ஜெஃப் பெசோஸ், அதேவழியைக் கையாண்டு தொழில் முயற்சி ஒன்றை ஆரம்பித்தால் என்ன என்று சிந்தித்ததன் விளைவே, இன்று உலகமெங்கும் ஆலமரம் போல இணைய வியாபாரத்தில் அசைக்கமுடியாத சக்தியாக உருவெடுத்திருக்கும் ‘அமேசான்’நிறுவனம்.